முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரில் 83 பேர் செலவுக்கணக்கை காட்டவில்லை: தேர்தல் கமிஷன் தகவல்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரில் 83 பேர் செலவுக்கணக்கை காட்டவில்லை என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 ஆயிரத்து 728 பேர் போட்டியிட்டனர். சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் அதிகபட்சம் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். தேர்தல் முடிவு வெளியாகி 30 நாட்களுக்குள் அவர்கள் செய்த செலவுக்கணக்கை ஒப்படைக்க வேண்டும்.

அதை இந்திய தேர்தல் கமிஷன், பார்வையாளர்களை வைத்து சரிபார்த்து முடிவு செய்யும். பின்னர் அந்த கணக்கு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படும். கடந்த ஜூன் மாதம் வரை தேர்தலில் போட்டியிட்டவர்களில் 165 பேர் செலவுக்கணக்கை காட்டவில்லை.அதைத்தொடர்ந்து அவர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீசு அனுப்பியது. அதன் பிறகும் செலவுக் கணக்கு காட்டாதவர்களின் எண்ணிக்கை 83 ஆக உள்ளது.

அதாவது மொத்தமுள்ள 3 ஆயிரத்து 728 வேட்பாளர்களில், 3ஆயிரத்து 645 பேர்தான் தேர்தல் செலவுக் கணக்கை காட்டியுள்ளனர். மொத்தமுள்ள வேட்பாளர்களில் 996 பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளை (மொத்தம் 9 கட்சிகள்) சேர்ந்தவர்களாகும்.அந்த கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 5 பேர் செலவுக் கணக்கை ஒப்படைக்கவில்லை என்று தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். அவர்கள் தே.மு.தி.க., பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.தேர்தல் கமிஷனின் நோட்டீசுக்கு பதிலளிக்காமலும், உரிய காலத்தில் செலவுக் கணக்கை காட்டாமலும் இருந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதித்து தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிக்கும். அந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதியில் இருந்து 3 ஆண்டுகள் கணக்கிடப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்