முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஸ்மார்ட் கார்டு வழங்க ரேஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது.

புதிய ரேஷன்கார்டு ‘ஸ்மார்ட்கார்டு’ அளவில் வழங்கப்பட உள்ளது. இதனால் பழைய குடும்ப அட்டைகளுக்கு பதிலாக 2017 ஜனவரி முதல் புதிய ஸ்மார்ட் கார்டு அனைவருக்கும் வழங்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப அட்டையில் உள்ள விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடைகளில் நவீன விற்பனை எந்திரம் (பாயிண்டஸ் ஆப் சேல்) அமைக்கப்பட்டு அதில் குடும்ப அட்டைதாரர்களின் முழு விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர்கள், பெரியவர்கள், சிறியவர்கள் விவரம், செல்போன் எண், சிலிண்டர் எண்ணிக்கை போன்றவற்றோடு ஆதார் எண்களும் பதிவு செய்யப்பட வேண்டும்.

குடும்ப அட்டை எண் முதல் அனைத்து விவரங்களும் அந்த கருவி மூலமாக கடை ஊழியர் பதிவு செய்வார். ஆதார் அட்டையை அக்கருவி ஸ்கேன் செய்து கொள்ளும்.இந்த பணி இதுவரையில் 13 மாவட்டங்களில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் பெரும்பான்மையான அளவில் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக திருப்பூர், கோவை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் தற்போது தொடங்கியுள்ளது. சென்னையில் 23 ரேஷன் கடைகளில் மட்டும் பரீட்சார்ந்த முறையில் தொடங்கப்பட்டது.அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டை தகவல்கள் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. தென் சென்னையில் 6-ந்தேதியும், வட சென்னையில் 7-ந்தேதியும் தொடங்குகிறது. 2 ஆயிரம் ரேஷன் கடைகளில் நவீன கருவி மூலம் ஒவ்வொரு குடும்ப அட்டைகளின் விவரமும் பதிவு செய்யப்படும்.இந்த பணி தொடங்குவதற்கு முன்பாக நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பொது மக்களிடம் இருந்து ரேஷன் கார்டு விவரங் களை எப்படி பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி கள் ஆலோசனை வழங்கு கின்றனர்.

இந்த பணி 2 மாதம் வரையும் நடைபெறும். நவம்பர் 1-ந்தேதி ஸ்மார்ட் கார்டு அச்சடிக்கும் பணி தொடங்கும். டிசம்பர் மாதம் ஸ்மார்ட் கார்டுகள் தயாராகிவிடும். ஜனவரியில் இருந்து பயன்படுத்த கூடிய வகையில் பழைய கார்டுகளை பெற்றுக் கொண்டு புதிய கார்டு வழங்கப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் நவீன கருவி மூலம் ஆதார் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் செப்டம்பர் 6-ந்தேதி இந்த பணி தொடங்குகிறது. வழங்கல் பதிவேட்டில் உள்ள குடும்ப அட்டை விவரங்களை ரேஷன் கடை ஊழியர் இந்த கருவியில் முதலில் பதிவு செய்துவிடுவார். அதன் பின்னர் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் போது குடும்ப தலைவரிடம் சிலிண்டர் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை போன்ற விவரங்கள் கேட்டு பதிவு செய்யப்படும்.அடுத்த முறை கடைக்கு வரும் போது ஆதார் அட்டை கொண்டு வந்து பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்படும். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் தினமும் 100 முதல் 200 குடும்ப அட்டைகள் விவரம் பதிவு செய்யப்படும்.

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை இருந்தாலும் பதிவு செய்யலாம். ஒரு மாதம் இந்த பணி நடைபெறும். அதன்பிறகும் பதிவு செய்யாதவர்களுக்கு கடைசி வாய்ப்பும் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும் போது ‘பில்’ வழங்கப்படாது. அந்த கார்டை கருவியில் காட்டினால் போதும் அவர்களுக்கு உரிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.பொருட்கள் வழங்குவது குறித்த தகவல் உடனடியாக குடும்ப தலைவர் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். சென்று விடும். செல்போனில் வந்த தகவலை காண்பித்து தான் பொருட்களை வாங்க முடியும். இதனால் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago