முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சல்மான்கான், ஜெய், அருண் விஜய்.. போதையில் பாதை மாறிய நடிகர்கள்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      சினிமா
Image Unavailable

சென்னை: நடிகர்கள் குடி போதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. அதன் லேட்டஸ்ட் நிகழ்வுதான், அருண் விஜய் விவகாரம்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் இன்று அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார்.அப்போது, அருண் விஜய் தனது ஆடி காரை அதிவேகமாக ஓட்டி வந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதினார். இதில் அருண் விஜய் எவ்வித காயங்கள் இன்றி தப்பினார். ஆனால் போலீஸ் வாகனம் சேதமடைந்தது.

மது மப்பு இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் அருண் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மது அருந்தி தலை கொள்ளாத போதையில் காரை ஓட்டி வந்துது தெரியவந்தது. உடனே அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். நல்லவேளையாக சாலையில் சென்ற யாருக்கும் இவரின் அதிவேகம் உபந்திரவம் தரவில்லை. நடிகர்கள் இப்படி காரை ஓட்டி ஆளை தூக்குவது சகஜமாகிவிட்டது. பண பலம், அதிகாரத்தில் இருப்போருடனான தொடர்பு போன்றவை வழக்குகளை செல்லரிக்க வைத்துவிடுகின்றன. நடிகர்களின் அதிகாரத்திற்கு முன்பு, ஏழை, எளியவர்கள், செல்வாக்கற்றவர்கள், கூனி குறுகி அடங்கித்தான் போகின்றனர்.

சல்மான்கான் இதற்கு அகில இந்திய அளவில், சல்மான்கான் வழக்கு ஒரு சிறந்த உதாரணம். வலுவற்ற வழக்கு பதிவுகளாலும், அதிகார பயத்துக்கு சிதறி ஓடும் சாட்சிகளாலும், மானை கொன்றார், மனிதனை கொன்றார் என எத்தனை வழக்கு போட்டாலும், எளிதில் விடுதலையாகிவிட்டார் சல்மான்கான். கண்டிப்பாக இது பிற செல்வந்தர்களும், நடிகர்களுக்கும், ஊக்கம் தருவதாகவே அமைந்திருக்கும். இதன் நீட்சிதான், அருண் விஜய் போதையும், அதன் அடுத்தகட்டமாக போலீஸ் வண்டி மீதே இடித்ததும்

ஜெய்யும் சிக்கினார் சென்னை 28, சுப்ரமணியபுரம், ராஜா ராணி, கோவா, வாமணன், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜெய். முன்னணியில் உள்ள இளம் நாயகர்களில் இவரும் ஒருவர். 2014 டிசம்பரில், சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் ஜெய் பங்கேற்றார். பின்னர் ராயப்பேட்டையில் இருந்து அடையாறு நோக்கி டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் காரில் சென்றார். காரை அவரே ஓட்டினார்.

மயிலாப்பூர் திருவள்ளூவர் சிலை அருகில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜெய் காரையும் நிறுத்தினார்கள். காரில் இருப்பது ஜெய் என்பது தெரியாமல் அவரிடம் போதை ஆசாமிகளை கண்டு பிடிக்கும் நவீன கருவியில் ஊதச் சொன்னார்கள். அக்கருவி ஜெய் குடித்து இருப்பதாக காட்டியது இதையடுத்து வாகனத்தை ஓரம் கட்ட வைத்தனர். ஜெய்யை கீழே இறக்கினார்கள். போதையில் கார் ஓட்டியதற்காக அவருக்கு அபராதம் வித்தனர். அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய்யை அடையாளம் கண்டு கொண்டதும், கூட்டம் கூடியது. பரபரப்பைத் தவிர்க்க, போலீசாரிடம் அவசர அவசரமாக அபராதம் செலுத்தி ரசீதைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்