முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடுத்த மாதம் சென்னை வருகை

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை - பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் (ஓ.டி.ஏ.) அடுத்த மாதம் 10-ந் தேதி இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்.சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி நிலையத்தில் (ஓ.டி.ஏ.) அடுத்த மாதம் 10-ந்தேதி இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழா, அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.

அதற்கு முன்னதாக, 9-ந் தேதி இரவு நீலகிரியில் உள்ள வெலிங்டனில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். பின்னர் கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர், 10-ந்தேதி நடைபெறும் இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.இந்த விழாவில் நடக்கும் அணிவகுப்பு மரியாதையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொள்கிறார். பின்னர், அன்றிரவே அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago