முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் சந்திப்பு : வன்முறை நிலவரம் பற்றி ஆலோசனை

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பிரதமர் நரேந்திரமோடியுடன் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி மீண்டும் சந்தித்து வன்முறை நிலவரம் பற்றி ஆலோசனை நடத்தினார். காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன், தீவிரவாத அமைப்பின், தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டதை கண்டித்து கடந்த மாதம் 9-ம் தேதி முதல் தொடர் போராட்டங்களும், வன்முறை செயல்களும் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் மற்றும் வன்முறைகளால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. அங்கு 50-வது நாளாக நேற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே அங்கு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. வன்முறை குறித்து ஆலோசிப்பதற்காக 2-வது முறையாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் காஷ்மீர் சென்றார். அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, காஷ்மீரில் அமைதியை கொண்டு வருவதாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆலோசனைக்கு பிறகு பேட்டியளித்த மெகபூபா முப்தி, காஷ்மீர் விஷயத்தில் பிரதமருக்கு மிகுந்த அக்கறையுள்ளது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்