முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு விபத்துக்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.14 லட்சம் நிதி உதவி - முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

4.6.2016 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், கோபாலசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரின் மகன் ராஜேந்திரன், 7.6.28016 அன்று தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், குடுமியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவரின் மகன் விஷால்,

9.6.2016 அன்று திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகரம், காந்தி நகரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் யோகேஸ்வரன்,
12.6.2016 அன்று திருவள்ளூர் மாவட்டம், நாரவாரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல் என்பவரின் மகன் ராகுல், அன்பழகன் என்பவரின் மகன் பிரேம்நாத்,

17.6.2016 அன்று விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம். வி.சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரகவுண்டர் என்பவரின் மகன் மாணிக்கம்,

24.6.2016 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், அகர எலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தூண்டி என்பவரின் மனைவி ஜானகி,

26.6.2016 அன்று விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், சின்ன சுரைக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிசெல்வம் என்பவரின் மகன் பழனிவேல் முருகன், குமார் என்பவரின் மகன் ஜெயபிரகாஷ், ராஜபாளையம் நகரைச் சேர்ந்த குமாரவேல் என்பவரின் மகன் ஜோதிவேல், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரின் மகன் தனுஷ்,

8.7.2016 அன்று சிவகங்கை மாவட்டம், தமறாக்கி தெற்கு கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவரின் மகன் சேதுமாதவன், 9.7.2016 அன்று திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை மேற்கு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் கமலநாதன் என்கிற செந்தில்நாதன்,

1.8.2016 அன்று மதுரை மாவட்டம் வடிவேல்கரை கிராமத்தைச் சேர்ந்த சித்திரை விநாயகம் என்பவரின் மகன் சின்னகாளை ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.  பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 14 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்