முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் ஏழை நலன் திட்டங்களை மாநில பா.ஜக. முதல்வர்கள் விரைவாக செயல்படுத்த வேண்டும்: அமித்ஷா

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  - மத்திய அரசின் ஏழை நலன் சார்ந்த திட்டங்களை பா.ஜ.க மாநில முதல்வர்கள் விரைவாக செயல்படுத்த வேண்டும் என பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார். தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. மாநில முதல்வர்கள் ,துணை முதல்வர்கள்மற்றும் பா.ஜ.க தலைவர்களின் ஒரு நாள் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பா.ஜ.கவின் தேசிய தலைவர் அமித் ஷா நேற்று பேசியதாவது, நாட்டின் 51 சதவீத நிலப்பகுதியிலும்   நாட்டின் மக்கள் தொகையில் 37 சதவீதம் உள்ள இடத்திலும் பா.ஜ.கட்சி ஆட்சி செய்கிறது.

மோடி அரசின் நல வாழ்வு திட்டங்களுக்கு கிடைத் வெற்றி இதுவாகும். உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத்தேர்தலில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.  மத்திய அரசின் கொள்கைகளை பா.ஜ.கமுதல்வர்கள் விரைவாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் ராஜஸ்தான் மாநில பா.ஜ.க முதல்வர் வசுந்தரா ராஜேவைத்தவிர இதர பா.ஜ.க மாநில முதல்வர்கள் கலந்து கொண்டார்கள். கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது . அதன் பின்னர் தற்போது பா.ஜ.க முதல்வர்கள் பங்கேற்கும் முதல் கூட்டம் இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்