முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அநாகரிகத்தின் உச்சக்கட்டமாக பாக்.பிரதமர் உலகின் 22 நாடுகளுக்கு சிறப்பு தூதர்களை அனுப்பி காஷ்மீர் பிரச்சினை பேச கூறுகிறார்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  -  அநாகரிகரிகத்தின்  உச்சக்கட்டமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உலகின் 22 நாடுகளின் தலைநகரங்களுக்கு  எம்.பிக்களை சிறப்பு தூதர்களாக அனுப்பி காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச கூறுகிறார்.  காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்வான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து, அந்த பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மாவட்டங்களில் பிரிவினை வாதிகள் பாகிஸ்தானின் ஆதரவுடன் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் .

 கடந்த  49 நாட்களாக  காஷ்மீரில் வன்முறையாளர்கள் நடத்தும் வெறிச்செயல்களால் கல் வீச்சு, அரசு அலுவலகங்களை எரித்தல், பஸ்களை எரித்தல் இயல்பு வாழ்க்கை முடங்கும் வகையில் வேலை நிறுத்தம் ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறார்கள்.
வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கு ம் இடையே நடந்த மோதல்களில் இதுவரை 65 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். 6ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். காஷ்மீரில் கடந்த 49 நாட்களாகவே மாநில தலைநகர் ஸ்ரீநகர் உள்பட அனைத்து நகரங்களிலும் இரவு நேரத்திலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது.

வன்முறையாளர்கள் இரவில் வன்முறைச்செயல்களில் ஈடுபடுவதால் பாதுகாப்பு படையினர் கடுமையான கட்டுப்பாடுகளை கடை பிடித்து வருகிறார்கள்.  இந்த வன்முறைகளால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு,  வெளியே நடமாடமுடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள்.  காஷ்மீரில் தீவிரவாதி புர்கான் வானி இறந்த நாளை கறுப்பு தினமாக அனுசரிப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அறிவித்ததுடன், காஷ்மீர் மக்களின் சுதந்திர போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்போம் என்றும் எச்சரித்தார். அவரது அந்த ஆணவ பேச்சு இந்தியாவிற்கு எரிச்சலை தந்தது.

காஷ்மீர் விவகாரம் குறித்து பேச பாகிஸ்தானுக்கு எந்த தகுதியும் இல்லை. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. இந்த உள்நாட்டு பிரச்சினையில் தலையிடுவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர்  பாரிக்கர் ஆகியோர் பாகிஸ்தானை எச்சரித்தனர். இந்த நிலையில் இந்தியாவின் மீது உச்சக்கட்ட தாக்குதலாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்  காஷ்மீர் உலக நாடுகளின் முக்கிய நகரங்களில் விளக்கப்போகிறாராம்.

இதற்காக அவர் தனது நாட்டு எம்.பிக்களை  22 நாடுகளின் தலைநகரங்களுக்கு அனுப்பி காஷ்மீர் விவகாரத்தை விளக்கி கூற முடிவு செய்திருக்கிறார். இந்த பிரச்சாரத்திற்காக  22 எம்.பிக்களை சிறப்பு தூதர்களாக நவாஸ் ஷெரீப் நேற்று  நியமித்தார். காஷ்மீர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையை நீண்ட காலமாக நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதனை நினைவுப்படுத்த தற்போது திட்டமிட்டுள்ளோம் என்றும் நவாஸ் ஷெரீப் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்