முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.வி.சிந்து பிரசித்தி பெற்ற தார்வாசா கோவிலில் சாமி தரிசனம்

சனிக்கிழமை, 27 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : பிரசத்தி பெற்ற லால் தார்வாசா கோவிலில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சிம்மவாஹினி காளியை வழிபட்டு சாமி தரிசனம் செய்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.  அவருக்கு தெலுங்கானா அரசு ரூ.5 கோடியும், ஆந்திர அரசு ரூ.3 கோடியும் ஊக்கத்தொகையாக வழங்கியது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு ஆந்திர அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தியது.  அதே போன்று தெலுங்கானா மாநில அரசு சார்பில் சிந்துவுக்கு பாராட்டு விழா நடத்தி ரூ.5 கோடிக்கான காசோலையை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் வழங்கினார். அத்துடன் ‘சிந்து எங்கள் மண்ணின் மகள்’ என்று பெருமிதத்தோடு கூறினார்.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற தார்வாசா கோவிலில் பி.வி.சிந்து சிம்ம வாஹினி காளியை சாமி தரிசனம் செய்தார். இதில் தலையில் வேண்டுதல் பொருட்களை சுமந்து சென்று தனது குடும்பத்துடன் காளியை சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்