முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம்-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டன - நாசவேலையா? போலீஸ் விசாரணை

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

கொச்சி : திருவனந்தபுரம்-மங்களூர் விரைவு ரயிலின் 12 பெட்டிகள் நேற்று அதிகாலை கேரள மாநிலம் கொச்சி அருகே தடம் புரண்டன. ஆனால் இதில் ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கு நாசவேலை காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம் -மங்களுர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு  8.40 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து மங்களூர் நோக்கி புறப்பட்டது. எர்னாகுளம் மாவட்டத்தில் உள்ள அலுவா மற்றும் காருகுட்டி என்ற இடத்தில் அங்கமாலி ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, நேற்று அதிகாலை சுமார் 2.20 மணியளவில் அந்த ரெயிலின் 12 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு விலகி, பக்கவாட்டில் தடம் புரண்டன.

இதனால் ஸ்தம்பித்த ரயில் பயணிகளுக்கு நேற்று காலை உணவு வழங்கப்பட்டு, சிறப்பு ரயில் நேற்று காலை 7.30 மணிக்கு சாலக்குடியிலிருந்து மங்களூர் நோக்கி புறப்பட்டது.

பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்ததால் ரயில் போக்கு வரத்து பாதிப்படைந்தது.

விபத்துக்கான காரணங்கள் தெரியவில்லை, முதன்மை ரயில்வே அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீண்டும் ரயில் போக்குவரத்து இப்பதையில் தொடங்க 10 மணி நேரம் வரை ஆகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவனந்தபுரம் - மும்பை, கன்னியாகுமரி - பெங்களூர், ஆலப்புழா - தன்பாத், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்திசாகர், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய தொலைதூர ரெயில்கள் திருநெல்வேலி - ஈரோடு மார்க்கமாக திருப்பி விடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்