முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வன்முறை நிராகரிக்கும் யாருடனும் பேச்சு வார்த்தை நடத்த தயார்: ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர் :  வன்முறையை நிராகரிக்கும் யாருடனும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி கூறினார்.

காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8ம் தேதியன்று  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பிரிவினை வாதிகள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த வன்முறையில் இதுவரை 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 6ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி நேற்று கூறியதாவது,

வன்முறையை நிராகரிக்கும் யாருடனும் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளோம். பிரதமர் மோடியின் கருத்துப்படி பேச்சு வார்த்தை மூலம் காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்