முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி சட்டம் ஒப்புதல் பெற பாராளுமன்ற கூட்டத்தொடரை முன் கூட்டியே நடத்த அரசு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை(ஜி.எஸ்.டி) சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

ஜி.எஸ்.டி மசோதா இந்த மாதம் ராஜ்ய சபாவிலும், லோக்சபாவிலும் நிறைவேறியது. இதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை அமல் படுத்த பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன் கூட்டியே நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பொதுவாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பொதுவாக நவம்பர் மாதம் 3வது அல்லது 4வது வாரத்தில் நடத்தப்படும். ஆனால் இந்த கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்த அரசு திட்டமிடுகிறது. மத்திய ஜி.எஸ்.டி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி சட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற அரசு முடிவு செய்துள்ளது.எனவே பாராளுமன்ற கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 9 அல்லது 10ம் தேதி துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஜி.எஸ்.டி சட்டத்தை நிறைவேற்ற 31 மாநிலங்களில் பாதி மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும். இந்த சட்ட மசோதாவிற்கு ஏற்கனவே  8 மாநில சட்டசபைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், இமாசலப்பிரதேசம், குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒப்புதல் அளித்திருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்