முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ ஒலிம்பிக் சாதனையாளர்கள் பி.வி.சிந்து, சாக்‌ஷி, திபா கர்மாகருக்கு கார் பரிசு - டெண்டுல்கர் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

ஹைதராபாத் : ரியோ ஒலிம்பிக்கில் சாதனை படைத்த இந்திய  வீராங்கனைகள் பி,.வி.,சிந்து, சாக்‌ஷி, திபா கர்மாகர் ஆகியோருக்கு இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பி.எம்.டபிள்யூ கார்களை பரிசாக வழங்கினார்.

பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் இந்த மாதம் 5ம் தேதி முதல் 21ம் தேதி வரை உலக நாடுகள் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டி நடைபற்றது. 206 நாடுகள் கலந்து கொண்ட இந்த ஒலிம்பிக் பந்தயத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஆவார். ரிய ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தினை ஹரியானா வீராங்கனை சாக்‌ஷி மாலிக் பெற்றார். அவர் மல்யுத்த வீராங்கனை . அந்த வீராங்கனை வெண்கலப்பதக்கம் பெற்றார்.

மேலும்  திரிபுராவினை சேர்ந்த இளம் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை திபா கர்மாகர் நூலிழையில் வெண்கலப்பதக்கத்தினை நழுவ விட்டார். அவருக்கு 4வது இடம் கிடைத்தது.ரியோ ஒலிம்பிக்கில் சாதனை படைத்த அந்த வீராங்கனைகளுக்கு ஹைதராபாத் நகரில் நேற்று -மிகப்பெரும்  பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மூன்று வீராங்கனைகளும் மேடையில் அமரவைத்து கவுரவிக்கப்பட்டனர். பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சந்துவின் பயிற்சியாளரான கோபிசந்தும் இவ்விழாவில் சிறப்பிக்கப்பட்டார்.

சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் ஹைதராபாத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். கோபிச்சந்த் உள்ளிட்டோருக்கு கார்களை பரிசு வழங்கிய நிகழ்ச்சியில் தலைமை விருந்தாளியாக பங்கேற்ற சச்சின், கூறியதாவது:

உங்களால் இந்த நாடு பெருமையடைகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்பதில் நீங்கள் எவ்வளவு துடிப்புடன்  இருந்தீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

வருகிற ஒலிம்பிக் போட்டியில்  தங்கம் வெல்வதற்கான ஏறப்டுகளை மேற்கொள்ள இதுவே சரியான நேரம்.. நீங்கள் இந்த நாட்டுக்கு அளிக்கவிருக்கும் ஆச்சரியமான தருணங்களுக்காக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். வென்றுகொண்டேயிருங்கள். பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபி சந்த்தின்  சாம்பியன்களை உருவாக்கும்  பணி அபூர்வமானது. பயிற்சியாளராக அபாரமான குணநலன்களைக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அனைவருக்கும் ரோல் மாடல்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பி.வி சிந்து பேசும் போது, கடந்த முறை சச்சின் தனக்கு கார் பரிசளித்த போது, ஒலிம்பிக் பதக்கம் வென்றால் இன்னொரு கார் பரிசளிப்பதாகக் கூறினார் அதன் படியே தற்போது அவர் எனக்கு கார் பரிசளித்துள்ளார். எனது கனவு நிஜமானது, அனைவருக்கும் நன்றி, கோபிசந்த் சாருக்கும் மிக்க நன்றி என்றார்.

சாக்‌ஷி மாலிக், திபா கர்மாகர் ஆகியோரும் சச்சினுக்கு நன்றி தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்