முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-மியான்மர் இடையே 4 ஒப்பந்தம் கையெழுத்தானது

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  மியான்மர் ஜனாதிபதி ஹிதின் கா  இந்தியா வந்துள்ள நிலையில் , இரு நாடுகள் இடையே  போக்குவரத்து தொடர்பு , மருந்துகள், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும்வேளாண்துறை, மின்சாரம்,வங்கி உள்பட பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பு மேற் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மியான்மரில் ,ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஜனநாயக முறையில் நடந்த பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனால்30ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ராணுவ ஆட்சி  முடிவுக்கு வந்தது. ஆங் சான் சூகி கட்சி சார்பில் ஜனாபதியாக ஹிதின் கா பதவியேற்றுள்ளார்.

மியான்மரில் மக்கள் ஆட்சி மலர்ந்த பின்னர் முதல் முறையாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஹிதின் கா நேற்று தலைநகர் டெல்லிக்கு வந்தார் . அவர் பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு வார்த்தையின் போது ஜனநாயகப்பாதையில் புதிய தடத்தை கண்டுள்ள மியான்மரின் அமைதி நடவடிக்கைக்கு அனைத்து உதவிகளையும் இந்தியா முழு மனதுடன் அளிக்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மியான்மர் ஜனாதிபதி இந்தியா வந்துள்ள நிலையில்  இரு நாடுகள் இடையே போக்குவரத்து வசதி, மருந்துகள், புதுப்பிக்கத்தக்க சக்தி உள்பட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.வேளாண், மின்சாரம்,வங்கி, ஆகியவற்றிலும் இந்தியா- மியான்மர் இடையே உறவை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

மியான்மர் ஜனாதிபதியை சந்தித்து பேசிய பின்னர் பிரதமர்மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், 

 இரு தரப்பினரும் தீவிரவாதத்தை கூட்டாக ஒடுக்க முடிவு செய்துள்ளன. அதேப்போன்று உள்நாட்டு கலகத்தை இந்த பிராந்தியத்தில் ஒடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. நமது மக்களின் பாதுகாப்பு குறித்து மியான்மர் ஜனாதிபதியும் நானும் விவாதித்தோம். தீவிரவாதம் பொதுப்பிரச்சினையாக உள்ளது.மியான்மரின் வளர்ச்சிக்கு இந்தியாவின் 125 கோடி மக்கள் நண்பர்களாகவும், கூட்டாளியாகவும் உதவிக்கரம் நீட்டுவார்கள் .

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ராஜிய கூட்டாளியாக மியான்மர் உள்ளது. இரு நாடுகளையொட்டி 1640கிலோமீட்டர் தூரத்திற்கு எல்லை பகுதி உள்ளது. தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள் மியான்மர் எல்லைப்பகுதியை யொட்டியே உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago