முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாட்டிறைச்சி உண்டுதான் 9 தங்கம் வென்றார் உசேன் போல்ட்: ட்விட்டரில் பா.ஜ.க. எம்.பி. கருத்து

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி  - உலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் தடகள நட்சத்திரம் உசைன் போல்ட் மாட்டுக்கறி எடுத்து கொண்டதே ஒலிம்பிக்கில் 9 பதக்கங்களை வென்றதற்குக் காரணம் என்று பாஜக எம்.பி.யும், தலித் பிரிவைச் சேர்ந்தவருமான உதித் ராஜ் தெரிவித்த கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. வடமேற்கு டெல்லி எம்.பி.யான உதித் ராஜ் தனது ட்விட்டரில், “ஜமைக்காவின் உசைன் போல்ட் ஏழை; அவரது பயிற்சியாளர் அவரை பசுக்கறி சாப்பிடுமாறு அறிவுறுத்தினார். அதனால் 9 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றார் உசைன்” என்று பதிவிட்டுள்ளார்.

பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில வடமாநிலங்களில் மாட்டிறைச்சி குறித்த தடை இருந்து வரும் நிலையில் இவரது ட்வீட் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆனால் இதனை உணர்ந்த உதித் ராஜ், அடுத்த ட்வீட்களில் தனது கருத்தின் தீவிரத்தை தணிக்குமாறு கருத்து வெளியிட்டார். அதாவது தனது ட்வீட் மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஊக்குவிப்பது அல்ல, போல்ட்டின் பயிற்சியாளர் கூறியதன் மறுபதிவே என்று கூறத் தொடங்கி விட்டார்.

“நான் ஜமைக்காவின் சூழ்நிலைமைகளை வைத்தே அப்படி கூறினேன், மோசமான உள்கட்டமைப்பு வசதிகள், வறுமை ஆகியவற்றிலும் கூட போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார் அவர் போலவே நம் வீரர்களும் வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்” என்றார்.மற்றொரு ட்வீட்டில், “வீரர்கள் போட்டிகளில் வெல்வதற்கான வழிமுறைகளை கண்டடைய வேண்டும், சூழ்நிலைகளையும் அரசையும் குறைகூறக்கூடாது, உணவு என்பது ஒருவரது சொந்தத் தெரிவே. உசைன் போல்ட்டும் அவரது பயிற்சியாளரும் பதக்கங்களை வெல்லும் வழியைக் கண்டுபிடித்துக் கொண்டது போல் நம் வீரர்களும் பயிற்சியாளர்களும் வழிமுறைகளைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்