முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் சாசனத்தை நன்கு படியுங்கள்: சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் அறிவுரை

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

பெங்களூரு  - அரசியலமைப்புச் சட்டத்தை மிக நன்றாக கற்கும்படி சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தினார்.  பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் (என்எல்எஸ்ஐயூ) 24-வது பட்ட மளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங் கேற்றார். மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி அவர் பேசியதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தை சட்ட மாணவர்கள் நன்கு பயில வேண்டும். ஜனநாயக அமைப்பு மற்றும் நடைமுறையைப் புரிந்து கொள்ள வேண்டும். தேசத்தைக் கட்டமைத்த தெரிவுகளை ஆய்வு செய்ய வேண்டும்.  இந்திய அரசியலமைப்பை வரையறுத்த அரசியல் நிர்ணய சபையானது இந்திய மக்களை பிரதிநிதித்துவம் செய்தது. அரசுக் கும் குடிமக்களுக்கும் இடையே யான கொள்கைகளைக் கச்சித மாகக் கொண்ட, நீதித்துறையால் பேணப்படும் சக்திமிக்க பொது-தனியார் கூட்டமைப்பு, சுதந்திரம், சமத்துவத்தைக் கொண்ட உலகிலேயே மிகச் சிறந்த அரசிய லமைப்பு நம்முடையதாகும்.

இந்தியாவின் ஒளிமிக்க இளம் தலைமுறை, சரியான கொள்கை களை வகுக்க மக்கள் பிரதிநிதி களுக்கு உதவ வேண்டும். பங்கேற்பு இல்லாமல் ஜனநாயகம் ஆரோக்கியமானதாக இருக்காது.  குறிப்பிட்ட இடைவெளியில் வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வது மட்டுமல்ல பங்கேற்பு. அதற்கும் மேலானது.  இந்தத் தேசத்தைப் பாதிக்கும் அனைத்து விஷயங்களிலும் உங்களின் பங்கேற்பு தேவை. நீங்கள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அல்லது உங்களுக்காக மற்றவர் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்