முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி விருது வழங்குவார்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - தேசிய ஜனநாயக முன்னணி அரசின் முன்னுரிமைத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் மத்திய மாநில அரசு உயரதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.  பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சயீ யோஜனா, தீனதயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா, பிரதான் மந்திரி பசல் பிமா யோஜனா, ஸ்டார்ட் அப் இந்தியா/ஸ்டேண்டப் இந்தியா, இ-நேஷனல் அக்ரிகல்சர் மார்க்கெட் போன்ற திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தும் அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி விருது வழங்கி கவுரவிப்பார்.

பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சயீ யோஜனா நீர்ப்பாசனம் பெறும் பரப்பை அதிகரிப்பது, விவசாயத் துக்கான நீரை செம்மையாக பயன் படுத்தவதற்கான திட்டமாகும்.  தீனதயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா, ஊரகப்பகுதி களுக்கு மின்இணைப்பு வழங்கு வதற்கான திட்டமாகும். பிரதான் மந்திரி பசல் பிமா யோஜனா, பயிர்க்காப்பீடு திட்டமாகும். ஸ்டார்ட் அப் இந்தியா/ஸ்டேண்டப் இந்தியா திட்டங்கள் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்கானவை.

இ-நேஷனல் அக்ரிகல்சர் மார்க் கெட் திட்டம், இந்தியா முழுவதும் பரலவலான மின்னணு வர்த்த கத்தை மேம்படுத்துவதாகும். இது வேளாண் ஒழுங்குமுறை விற் பனைக் கூடங்களின் கிடங்குகளை தேசிய அளவில் ஒருங்கிணைக் கிறது.  இத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தும் அதிகாரிகள் தேர்ந் தெடுக்கப்பட்டு குடிமைப்பணிகள் தினமாக அனுசரிக்கப்படும் ஏப்ரல் 21-ம் தேதி விருதுகள் வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேலும், சுற்றுச்சூழல் பாது காப்பு, பேரிடர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி மற்றும் சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகளை மையப் படுத்திய திட்டங்களில் சிறப்பாக செயலாற்றும் மத்திய மாநில அரசின் துறைகள், மாவட்ட நிர்வாகங்களுக்கும் விருது வழங் கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்