முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

500 அம்மா பூங்காக்கள் - 500 அம்மா உடற்பயிற்சி நிலையங்கள் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - ஊரக பகுதி இளைஞர்களுக்கு உடல்திறன் மேம்படுத்த 500 அம்மா உடற்பயிற்சி கூடங்களும், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு அம்சங்களுடன் கூடிய 500 அம்மா பூங்காக்களும்  அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.  இது குறித்து தமிழக சட்டபேரவையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா  வெளியிட்ட அறிவிப்புகள்  வருமாறு:-

ஊரகப் பகுதி இளைஞர்களுக்கு உடல்திறன் மற்றும் மனவளத்தினை மேம்படுத்த ஊரகப் பகுதிகளில், ‘அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள்’ அமைக்கப்படும்.  ஒவ்வொன்றும் 10 லட்சம்  ரூபாய் செலவில் 500 அம்மா உடற்பயிற்சிக் கூடங்கள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமெண்ட் பெஞ்சுகள், குடிநீர் வசதிகள், புல்தரை, பசுமைத் தோட்டம் மற்றும் கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய 500 ‘அம்மா பூங்காக்கள்’ 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு  அமைக்கப்படும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்