முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில் தமிழக அமைச்சரவையில் மாற்றம்: : கே.பாண்டியராஜன் அமைச்சர் ஆகிறார்

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையின் பேரில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக கே.பாண்டியராஜன் இன்று மாலையில் கவர்னர் மாளிகையில் நடக்கும் பதவி ஏற்பு விழாவில் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு கவர்னர் ரோசையா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.இது குறித்து கவர்னர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

பால்வளத்துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.பி. சண்முகநாதனை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட கவர்னர், எஸ்.பி.சண்முகநாதனை அமைச்சரவையில் இருந்து விடுவித்துள்ளார். மேலும் ஆவடி தொகுதியை சேர்ந்த பாண்டியராஜனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக  நியமிக்க முதல்வர் ஜெயலலிதா பரிந்துரைத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை கவர்னரும் ஏற்றுள்ளார். மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் மற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், ஊரக தொழில்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,  பால்வளத்துறை அமைச்சராகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த பென்ஜமின் ஊரகத்தொழில்வளத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 புதிய அமைச்சர் பாண்டியராஜனின்  பதவியேற்பு விழா  இன்று (30 ம்தேதி ) மாலை 4-35 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் என்று கவர்னர் மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது. விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago