முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வான் சாகச வீரர் ராஜ்குமாருக்கு டென் சிங் நார்கே தேசிய சாகச விருது : முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை  - வான் டைவிங்கில்,  சாதனை படைக்கும் தமிழக வீரர் ராஜ்குமாருக்கு டென் சிங் நார்கே தேசிய சாகச விருது அளிக்க மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தேசிய விருது பெறும் அவருக்கு முதல்வர்  ஜெயலலிதா வாழ்த்து கடிதம் அனுப்பினார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா அந்த வீரருக்கு அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழக அரசின் பரிந்துரைப்படி, இந்திய அரசு, டென் சிங் நார்கே தேசிய சாகச விருது 2015க்கு உங்களை தேர்வு செய்துள்ளது  என்பதை கேட்கும் போது , நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த விருது, நீங்கள் வான் டைவிங் சாகசத்தில் ஆற்றிய மகத்தான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக அளிக்கப்படுவதாகும்.

உங்களுக்கும், உங்களது வெற்றிக்கு  உதவியவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். வான் சாகசத்திற்காக அளிக்கப்படும் தேசிய விருது உங்களை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன். மேலும் எதிர்காலத்தில் மிக உயரிய இலக்குகளை அடைவதற்கான கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளவும் இந்த விருது உங்களை ஊக்கப்படுத்தும் என்றும், வரும் காலத்தில் நீங்கள் தேசத்திற்காகவும், தமிழகத்திற்காகவும் பல புகழ்களை கொண்டு வருவீர்கள் என நம்புகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago