முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்களின் தரை-வான்-கடல் தளங்களை பயன்படுத்திக் கொள்ள இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் -  ராணுவ பராமறிப்பு பணிகள் மற்றும் மறு விநியோகம் ஆகியவற்றுக்காக, தங்களின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தமொன்றில் இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை ஊக்குவிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட பல ஒப்பந்தங்களில், இது சமீபத்திய ஒப்பந்தமாகும். ஆனால், இந்த ஒப்பந்த ஏற்பாட்டின்படி, அமெரிக்க ராணுவத்தினர் இந்தியாவில் இருந்து பணியாற்றும் சூழல் வராது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கரும், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ் கார்டரும் தெரிவித்துள்ளனர்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ உறவுகளை பலப்படுத்தும் இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதி நோக்கம், அதிகரித்து வரும் சீனாவின் பிடிவாதமான ராணுவ உறுதிப்பாட்டினை சமநிலைப்படுத்துவதாகும் என்று பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்