முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்கள் கல் வீச்சில் ஈடுபட வேண்டாம் : காஷ்மீர் முதல்வர் மெகபூபா வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 30 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

ஜம்மு  - கல் வீச்சில் ஈடுபடுவதை மாணவர்கள் நிறுத்த வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி கூறியுள்ளார். காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8-ம் தேசியன்று, டிரால் பகுதியை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து, அந்த பள்ளத்தாக்கு பகுதியில்,  கடந்த ஒன்றரை மாதமாக பிரிவினை வாதிகள் தூண்டுதலின் பேரில் அங்கு வன்முறை போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மாணவர்களை பயன்படுத்தி கல்வீச்சு போன்ற வன்முறைகளிலும் ஈடுபடுகிறார்கள்.

இதனால் அந்த பள்ளத்தாக்கில் பதட்ட நிலையும் 51 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் நீடித்தது. இந்தநிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காஷ்மீரில் பெரும்பாலான இடங்களில் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரிவினைவாதிகள்  மாணவர்களை தங்கள் வன்முறை செயல்களில் ஈடுபடுத்துகிறார்கள். இது குறித்து ஜம்முவில் மாநில முதல்வர் மெகபூபா முப்தி நேற்று கூறியதாவது:-

மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். அவர்கள் நன்றாக படித்து டாக்டர்களாகவும், என்ஜினியர்களாகவும், பள்ளி ஆசிரியர்களாகவும் ஆக வேண்டும். அவர்கள் எதிர்ப்பு பேரணியில் கல் வீச்சில் ஈடுபட்டால், எதிர் காலத்தில் டாக்டர்கள், ஆசிரியர்கள், என்ஜினியர்கள் நமக்கு இல்லாமல் போகும். கல்வி என்பது மிக அத்தியாவசியமானது. நாட்டின் வளர்ச்சிக்கும்,மேம்பாட்டிற்கும் கல்வி தேவையாகும்.

தனிநபர் மற்றும் சமூக வளர்ச்சிக்கு கல்வியே பிரதானமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர்  கல்வித்துறையில் முன்னேறி வருகிறது என்பதை எண்ணும் போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்வி கற்க வேண்டும்.  காஷ்மீரி பண்டிட் நண்பர்கள் தங்களது பெயரில் கல்வியை குறிப்பிடுவார்கள். அவர்கள் தங்களது பெயரோடு குடும்ப பெயரை குறிப்பிடுவதற்கு பதிலாக கல்வியின் பெயரையே குறிப்பிடுவதை விரும்புகிறார்கள். அத்தகைய கலாச்சாரம்தான் காஷ்மீர்  பள்ளத்தாக்கின் கலாச்சாரம்  ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்