முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மீண்டும் வன்முறை,ஒருவர் பலி

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  -  காஷ்மீரில் மீண்டும் வன்முறை வெடித்தது.இந்த வன்முறையில் பாதுகாப்பு படையினருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தார்கள். இந்த வன்முறை பாரமுல்லா மாவட்டத்தில் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதட்ட நிலை நிலவுகிறது. காஷ்மீரில் கடந்த ஜூலை மாதம் 8 ம்தேதியன்று டிரால் பகுதியை சேர்ந்த ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தளபதி புர்கான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்ட மறுநாளில் இருந்து பிரிவினை வாதிகள் காஷ்மீரில் வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இளம் மாணவர்களையும் கல் வீச்சு போன்ற தாக்குதல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.

 இதனால் பதட்டம் நிலவிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு கடை பிடிக்கப்பட்டது. கடந்த இரு தினங்களாகதான் அங்கு அமைதி நிலவியதால் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பாரமுல்லா மாவட்டத்தில் நேற்று வன்முறை மீண்டும் வெடித்தது. இதில் பாதுகாப்பு படையினருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயம் அடைந்தார்கள். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள நாடிஹால் பகுயில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள ன்முறையாளர்கள் கல் வீச்சில் ஈடுபட்டபோது இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது.  பழங்கள் ஏற்றிய லாரிகளை பாதுகசாப்புபடையினர் அனுமதிக்காத போது ஆத்திரம் அடைந்த நபர்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள்.

 பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்,  தனிஷ் மன்சூர் என்பவர் இறந்தார்.   அவரது மரணத்தை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த 53 நாட்களில் இதுவரை 71 பேர் கொல்லப்பட்டார்கள். காயம் அடைந்த  4பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காஷ்மீரில் நேற்று காலை எங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இருப்பினும் அனைத்து இடங்களிலும் தீவிரபாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்