முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 100-வது நாள்: சட்டசபையில் வண்ண மலர் அலங்காரம்

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து நேற்று 100-வது நாள் நிறைவடைகிறது. அதையொட்டி சென்னை கோட்டை, சட்டமன்ற வளாகங்கள் தோரணங்களாலும், வண்ண மலர்களாலும் வனப்புடன் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த மே மாதம் ஆட்சி அமைந்தது. மே 23-ம் தேதி அவர் முதல்வராக 6-வது முறையாக பதவி ஏற்றார். இந்த ஆட்சியில் நேற்று 100-வது நாள். இந்த 100-வது நாளை கொண்டாடும் வகையில் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மல்லிகை, ரோஜா போன்ற வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. அதே போல சட்டமன்றத்தின் நுழைவு வாயிலில் இரு பக்கமும் வரிசையாக வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பதில் அளித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதுப்பற்றி குறிப்பிட்டார். நேற்று முதல்வர் ஜெயலலிதா அரசு ஆட்சிக்கு வந்து 100-வது நாள். 32 ஆண்டுகளுக்கு பிறகு தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 100-வது நாள். உலக வரலாற்றில் பொற்கால ஆட்சி தந்த முதல்வர் ஆட்சிக்கு நேற்று 100வது நாள். எங்களை அமைச்சர்களாக, உறுப்பினர்களாக இந்த மன்றத்தில் பதவியில் அமர்த்திய முதல்வர் ஜெயலலிதாவின் மாட்சிமை தங்கிய ஆட்சியின் 100-வது நாள். 6-வது முறையாக மட்டுமல்ல 100-வது முறையாகவும் இனிமேல் முதல்வர் ஜெயலலிதா தான் தமிழ்நாட்டின் முதல்வராக வருவார் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமித்துடன் கூறினார்.

அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜை தட்டி முதல்வர் ஜெயலலிதாவின் 100-வது நாள் ஆட்சிக்கு மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்தனர். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர் துறை சம்பந்தப்பட்ட கேள்விக்கு பதில் அளிப்பதற்கு முன்பு மக்கள் நலன் காக்கும் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து நேற்று 100-வது நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்