முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமனம்

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      இந்தியா
Image Unavailable

சென்னை, தமிழக கவர்னர் ரோசய்யாவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த  நிலையில், மகாராஷ்டிரா கவர்னர்  வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் தமிழக கவர்னராக ரோசய்யா நியமிக்கப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க கூட்டணி அரசு பதவியேற்றதும் பெரும்பாலன மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றப்பட்டார்கள். ரோசய்யா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே கவர்னர் பதவியில் நீடித்தனர். இந்த நிலையில், ரோசய்யாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

வழக்கமாக கவர்னர்கள் பதவி நியமனம் குறித்த அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களுக்கு பின் அவர்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு சென்று பதவியேற்பர். ஆனால் தமிழகத்துக்கு புதிய கவர்னர் யாரும் அறிவிக்கப்படாததால் ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், ரோசய்யாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்காமல் மத்திய அரசு நேற்றுடன் அவரை பதவியிலிருந்து விடுவித்தது. மேலும், மகாராஷ்டிரா மாநில கவர்னர்  வித்யாசாகர் ராவ், தமிழக கவர்னர்  பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago