முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆள்மாறாட்டம் - போலி ஆவணப்பதிவை தடுக்க பதிவுத்துறை அலுவலகங்களில் புதிய மென்பொருள் - முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களிலும் புதிய மென்பொருள் பயன்படுத்தி ஆவணங்கள் பதிவு செய்யப்படும். இதன்மூலம் ஆள்மாறாட்டம் மற்றும் போலி ஆவணப்பதிவு தடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

பதிவுத் துறையில் ஆவணப் பதிவு தொடர்பான நடைமுறைகள் அனைத்தும் முற்றிலும் கணினி மயமாக்கப்படும். இதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு, தற்போது சோதனை முறையில் 20 அலுவலகங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களிலும் இந்த மென்பொருள் விரைவில் அமல்படுத்தப்பட்டு இதன் மூலமே ஆவணப் பதிவுகள் நடைபெற வழி வகைசெய்யப்படும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் template வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் ஆவணங்களை தாங்களே தயாரித்து அதனை உரிய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இணையதளம் மூலம் அனுப்பி வைக்க இயலும். ஆவணதாரர்களின் விரல் ரேகைப் பதிவுகள் மூலம் அத்தாட்சி செய்தல் மற்றும் அவர்களின் அலைபேசி எங்கள் மற்றும் ஆதார் எண்கள் ஆகியவற்றைப் பெற்று குறுஞ் செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பப்படும்.

இதனால் போலி ஆவணப் பதிவு மற்றும் ஆள் மாறாட்டம் தடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை இணையதளம் வழியாக உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பித்தால் இணையதளம் மூலமாகவே அவற்றை வழங்வகை ஏற்படும். சொத்துரிமை தொடர்பாக வருவாய்த் துறையால் பராமரிக்கப்படும் விவரங்களை இணையதளம் மூலமாக சரி பார்க்கும் வசதி ஏற்படும். ஆவணப் பதிவு தொடர்பான விவரங்களை இணையதளம் மூலமே வருவாய்த் துறை பார்க்க இயலும் என்பதால், விரைந்து பட்டா மாறுதல் செய்ய இயலும்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago