முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட்டு தீர்ப்பு

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி சேலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தேன். ஆனால், என்னுடைய வேட்பு மனுவை நிராகரித்த தேர்தல் அதிகாரி ஜெயலலிதா உள்ளிட்டோரின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டார்.எனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால், ஆர்.கே.நகர் சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலையும், இந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றிப் பெற்றதையும் ரத்து செய்யவேண்டும்.இந்த தொகுதிக்கு புதிதாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். அப்போது, ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பி.குமார் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து நீதிபதி கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு தீர்ப்பை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நேற்று  பிறப்பித்தார். அந்த தீர்ப்பில், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் ஏற்கும்படியாக இல்லை. எனவே, இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்