முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிலையன்ஸ் ஜியோ.. அவசியம் தெரிய வேண்டிய 5 தகவல்கள்!

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அந்த நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் இன்று தெரிவித்தார்.டிசம்பர் இறுதிவரை, அழைப்புகள் அனைத்தும் இலவசம் என்றும் இணையதள சேவைக்கான கட்டணம், உலகிலேயே மிகவும் குறைவு என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

மும்பையில் இன்று நிருபர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி கூறியதில் முக்கியமான 5 பாயிண்டுகளை இங்கே பாருங்கள்: ஜியோவில் டிசம்பர் 31ம் தேதிவரை அனைத்து உள்ளூர், உள்நாட்டு அழைப்புகளும் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசம்.வெல்கம் ஆஃபர் மூலமாக வரும் டிசம்பர் 31ம் தேதிவரை ஹெச்டி வீடியோ அழைப்புயும் இலவசமாக வழங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்தியாவில் 90 சதவீதம் பேர் ரியோ வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என்கிறார் முகேஷ் அம்பானி.

ரூ. 1500 மதிப்புள்ள ஜியோ ஆப்புகள் அத்தனையையும் அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிவரை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.பிற செல்போன் சேவை நிறுவனங்கள் ஒரு ஜி.பி. டேட்டாவை 250 ரூபாய் என்ற அளவில் தரும் நிலையில், உலகிலேயே குறைந்த கட்டணமாக, 1 ஜி.பி. டேட்டாவை ஜியோ 50 ரூபாய்க்கு தர உள்ளது.நாட்டில் எங்கு சென்றாலும் ரோமிங் கட்டணம் கிடையாது. இந்த அறிவிப்பின் மூலம், பிற செல்போன் நிறுவனங்களும், ரோமிங் கட்டணத்தை கட் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் சிம்கார்டு கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago