முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதம் குறைக்க இந்தியா முடிவு

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

சிங்கப்பூர், இன்னும் 6 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் இறக்குமதியை தற்போதைய அளவில் இருந்து 10 சதவீதம் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர்  தர்மேந்திரா பிரதான் கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது,

 நாட்டின் எரி சக்தி பாதுகாப்பில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. 2022 ம் ஆண்டில் தற்போதைய கச்சா எண்ணெய் இறக்குமதி அளவைக்காட்டிலும் 10 சதவீதம் குறைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் 70-75சதவீதம் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

உள்நாட்டில் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டின் எரி சக்தி தேவையை எதிர் கொள்ள முடியும் என நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்