முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்நாத் சிங் ரஷ்யா, அமெரிக்கா நாடுகளுக்கு செல்கிறார் - 18-ம் தேதி பயணம் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மத்திய உள்துறை  அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவர்  இந்த பயணத்தின் போது,பாகிஸ்தானில் இருந்து உருவெடுக்கும் தீவிரவாதம் குறித்து விவாதிக்கிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் ரஷ்யா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவரது ரஷ்ய  பயணம் வருகிற 18ம் தேதியன்று துவங்கி 5 நாட்கள் இடம் பெறுகிறது. அவர் ரஷ்ய  உதுறை அமைச்சர்  விளாடிமிர் கோலோகோல்ட்சேவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது,  தீவிரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாகஇந்தியா- ரஷ்யா   கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இது அமைச்சர்களும் விவாதிக்கிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் வன்முறை மற்றும் தாக்குதல்களில் ஈடுபடுவது குறித்தும்   இந்தியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடவடிக்கைகள் குறித்தும்  அருகாமை நாடுகளில்  தீவிரவாதிகளின் நடவடிக்கை குறித்தும் அவர்கள் விவாதிக்கிறார்கள்.

ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு , ராஜ்நாத் சிங் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு  இந்த மாதம்  26ம் தேதியன்று செல்கிறார். அவர் 7 நாள் பயணமாக அமெரிக்கா செல்கிறார். அவர் இந்தியா-அமெரிக்கா உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பேச்சு வாத்தை நடத்த அமெரிக்க உள்துறை அமைச்சர்  ஜே சார்லஸ் ஜான்சனுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது குறித்தும் நிதியுதவி அளிப்பது குறித்தும் அமெரிக்க அமைச்சருடன் ராஜ் நாத் சிங் பேசுகிறார். இந்தியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடவடிக்கை குறித்தும், தெற்கு ஆசிய நாடுகளில்  தீவிரவாத நடவடிக்கைகள் குறித்தும் ராஜ் நாத் சிங் அமெரிக்க அமைச்சருடன் பேசுகிறார்.

ஜி-20 மாநாடு , பிரிக்ஸ் மாநாடு, கிழக்கு ஆசியா மாநாடு ஆகியவற்றில் பிரதமர் மோடி பாகிஸ்தானில் இருந்து உருவெடுக்கும் தீவிரவாதம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். ஜம்மு காஷ்மீர் வன்முறை தீவிரவாதங்களுக்கு பாகிஸ்தான் வெளிப்படையாக ஆதரவு அளிப்பது குறித்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த இரு மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் பிரிவினை வாதிகள் பாகிஸ்தான் ஆதரவுடன் நடத்தி வரும் போராட்டங்களால் அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தீவிரவாதிகளுடன் பாகிஸ்தான் கை கோர்த்து இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவது தொடர்பாக உலக நாடுகளில் இந்தியா கேள்வி எழுப்பி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்