முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுரி ராணுவ முகாம் தாக்குதலால், ராஜ் நாத் சிங் ரஷ்ய பயணம் ஒத்தி வைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  காஷ்மீர் யுரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 19 வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ் நாங் சிங் ரஷ்ய பயணத்தை ஒத்தி வைத்தார் . மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் அவர் விமர்சித்தார்.

ஜம்மு காஷ்மீர் யுரி ராணுவ முகாமில் நேற்று அதிகாலை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். 19 வீரர்கள் காயம் அடைந்தார்கள். பாகிஸ்தான் எல்லை வழியாக நடந்த தாக்குதல் குறித்து இந்திய கடும் கண்டனம் தெரிவித்தது. மத்திய  உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் 4 நாள் பயணமாக ரஷ்யாவிற்கு நேற்று புறப்பட இருந்தார்.

அவர் இந்த ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவிற்கும் ஒரு வார கால பயணமாக செல்ல இருந்தார். தற்போது காஷ்மீரில் நடந்த தாக்குததலால்  நிலையில் அவர் இந்த இரு நாட்டு பயணத்தையும் தள்ளி வைத்துள்ளார்.

காஷ்மீர் நிலவரத்தை மிக கவனமாக கவனிக்கும் படி  உள்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். தற்போதய காஷ்மீர் நிலையை கருத்தில் கொண்டு எனது ரஷ்ய மற்றும் அமெரிக்க பயணத்தை ஒத்திவைக்கிறேன் என ட்விட்டர் செய்தியில் ராஜ் நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் வோரா மற்றும் முதல்வர் மெகபூபா முப்தியுடன் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் தொலைபேசியில் பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்