முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாசனுடன் கூட்டணி பேச்சு: தி.மு.க. முடிவை அறிவித்த பிறகு காங். நிலையை தெரிவிப்போம்: திருநாவுக்கரசர்

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, வாசனுடனான கூட்டணி குறித்து தி.மு.க. தனது முடிவை அறிவித்த பிறகு காங்கிரசின் முடிவு தெரிவிக்கப்படும் என்று திருநாவுக்கரசர் கூறினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி என்பது இனிமேல் அமைக்க வேண்டியது இல்லை. ஏற்கனவே கூட்டணியில்தான் இருக்கிறோம்.  சட்டசபை தேர்தலில் ஒன்றாகவே தேர்தலை சந்தித்தோம். சட்டமன்றத்திலும் இரு கட்சிகளும் இணைந்தே செயல்படுகின்றன.

உள்ளாட்சி தேர்தலில் ஒரு சிறு வித்தியாசம். 25 ஆயிரம் இடங்களில் போட்டியிட வேண்டி உள்ளது. எனவே மாநில அளவில் பிரிப்பதா, மாவட்ட அளவில் பிரிப்பதா என்பது பற்றியெல்லாம் பேசி முடிவு செய்வோம். எத்தனை மாநகராட்சி, நகராட்சி என்பதெல்லாம் இப்போது சொல்ல முடியாது. காரணம் கவுன்சிலர்கள் தான் தலைவர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு என்பது சாதாரணமானது தான். நானும் கூட நேற்று தி.மு.க. தலைவர் கலைஞரை சந்தித்து பேசினேன்.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது பற்றி வாசன் தனது விருப்பத்தை தெரிவித்து இருக்கலாம். ஆனால் முடிவை அறிவிக்க வேண்டியது தி.மு.க.தான்நேற்று நானும் கலைஞரும் சந்தித்தது தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையில் வெளிவந்துள்ளது. ஆனால் வாசன் சந்தித்தது வெளிவரவில்லையே. தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம் பெற்றால் காங்கிரஸ் இதில் இருக்குமா என்று கேட்கிறீர்கள்.இதையெல்லாம் யூகம் தான். இன்னும் கூட்டணி பற்றி தி.மு.க. எதுவும் சொல்லவில்லையே. முதலில் தி.மு.க. அறிவிக்கட்டும். அதன்பிறகு காங்கிரஸ் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்