முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் : ராகுல் காந்தி உறுதி

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

கான்பூர்  - உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.  உத்தரப் பிரதேசத்தின் தியோரியா நகரில் இருந்து டெல்லி வரை ராகுல் காந்தி கிசான் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

கதம்பூர் என்ற இடத்தில் விவசாயிகள் மத்தியில் ராகுல் பேசியதாவது,  “சமூகத்தில் பிரதமர் மோடி விஷம் பாய்ச்சுகிறார். இந்திய மக்கள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபடச் செய்கிறார். விவசாயிகளின் வலியும் பிரச்சினைகளும் பிரதமரை சென்றடையாதது துரதிருஷ்டவசமானது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

உத்தரப் பிரதேச மாநில மக்களுக்காக பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, பாஜக ஆகிய கட்சிகள் எதுவும் செய்யவில்லை. இக்கட்சிகள் சார்பில் அமைந்த அரசுகள் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தன. இந்த மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல காங்கிரஸ் விரும்புகிறது” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago