முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி தமிழகம் முழுவதும் பிரார்த்தனை

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டி தமிழகம் முழுவதும் அ  தி.மு.க.வினர் அபிஷேகம், சிறப்பு பூஜை, பிரார்த்தனைகள் செய்தனர்.

ராமநாதபுரம் கோவிலில் ருத்ராபிஷேகம் நடந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12 வகையான அபிஷேகங்கள் நடந்தன.

தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் வடபழனி முருகன் கோவிலில் மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன், அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம் ஆகியோர் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர். உடன்,திநகர் பகுதி செயலாளர் திநகர்.டி.டி.பால்ராஜ்  , மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.எ.எஸ்.செந்தில்வேல், கவுன்சிலர் சின்னையன்எம்சி , இளையமாறன் சுலைமான்ராஜா  இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ தி.மு.க. சார்பில் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு வழிபாடும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தஞ்சாவூர் ரெயிலடி அருகில் உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் முதல்வர் ஜெயலலிதா உடல் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழவேண்டி தஞ்சை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 1 மணிநேரம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேற்கண்ட சிறப்பு பூஜையில் அ  தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் ஏ.ஜி.தங்கப்பன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், மாவட்ட பால்வளத் தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர்கள் துரை.திருஞானம், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், பகுதி கழகச் செயலாளர்கள் வி.அறிவுடைநம்பி, வி.புண்ணியமூர்த்தி, எஸ்.சரவணன், எஸ்.ரமேஷ், தஞ்சை காவோி சிறப்பங்காடி தலைவர் வி.பண்டரிநாதன், கரந்தை திராவிட வங்கித் தலைவர் த.பஞ்சாபிகேசன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் துரை. வீரணன், வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.சாமுவேல் உட்பட ஏராளமானபேர் சிறப்பு வழிபாட்டில் கலந்துக் கொண்டார்கள்.

ஒரத்தநாடு ஒன்றியம், திருவோணம் ஒன்றியம், பட்டுக்கோட்டை நகரம், மதுக்கூர் ஒன்றியம், பட்டுக்கோட்டை ஒன்றியம், பேராவூரணி ஒன்றியம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆகியப் பகுதிகளிலும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டி அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. திட்டை குருபகவான் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என இஸ்லாமியர்களின் புனிதநாளான வெள்ளிக்கிழமையான  நேற்று அனைத்து மசூதிகளிலும் மதியம் ஜும்மா தொழுகை நடைபெற்றது.

அகில இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ஜும்மா தொழுகை முடிந்தவுடன் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் சார்பில் இரண்டு ரக்காத்துகள் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் அடைந்து வீடு திரும்ப வேண்டிய சிறப்பு தொழுகை நடந்தது. இந்த சிறப்பு தொழுகைக்கு பிறகு முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி, அரசு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று மாநில தலைவர் எஸ்.ஜே.இனயாத்துல்லாஹ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்