கர்நாடகாவில் நடப்பது காவிரி பிரச்சினை அல்ல, காங்கிரஸ் பிரச்சினை: பொன்.ராதாகிருஷ்ணன்

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016      நாமக்கல்
Image Unavailable

சென்னை, சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் சந்திக்கும் என்றும், கர்நாடகாவில் நடப்பது காவிரி பிரச்சினை அல்ல, காங்கிரஸ் பிரச்சினை என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபரிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் இருக்கும் காங்கிரஸ் அரசாங்கம் கடந்த 4 ஆண்டுகளாக எல்லா துறைகளிலும் தோற்றுப் போன அரசாங்கமாகவும், மக்கள் விரோத அரசாங்கமாகவும் திகழ்ந்து வருகிறது. கர்நாடகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் நடந்தாலும், சித்தராமையா அரசாங்கத்தை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள். இந்த நிலையை நன்றாக புரிந்து வைத்து இருந்த காங்கிரஸ் அரசாங்கம் சுமுகமாக தீர்த்து இருக்க வேண்டிய காவிரி பிரச்சினையை பூதாகரமாக மாற்றி, மொழி தீவிரவாதிகளுக்கு முழு ஆதரவை கொடுத்து, கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த வைத்து, காவிரி தண்ணீர் தமிழகத்துக்கு வருவதை ஒரு மிகப்பெரிய பாவமான செயலாக காட்டிவிட்டார்கள்.

தன்னுடைய காங்கிரஸ் அரசாங்கத்தை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றுவதற்காக இதை ஒரு பெரிய பிரச்சினையாக அவர்கள் கையாண்டார்கள். அதன் விளைவு தான் அங்கு கலவரம் நடந்து தமிழர்கள் தாக்கப்பட்டது. இன்று உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பு கொடுத்த பிறகும், தன்னுடைய அரசாங்கத்தை திருப்தி செய்யக்கூடிய அளவுக்கு சூழ்நிலையை உருவாக்கும் சிந்தனையோடு அங்குள்ள காங்கிரஸ் அரசாங்கம் செயல்படுகிறது. இது முழுக்க முழுக்க காவிரி பிரச்சினை அல்ல. காங்கிரஸ் பிரச்சினை.

அவர்களுடைய வீழ்ச்சியில் இருந்து மீட்டுக்கொள்வதற்காக அவர்கள் கையாளும் மிகப்பெரிய அரசியல் தந்திரம் என்பதை இருமாநில மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.இனிமேல் கர்நாடகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் நடந்தாலும் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். உச்சநீதிமன்ற அளித்துள்ள தீர்ப்பின்படி, தமிழ்நாட்டுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய காவிரி தண்ணீர் கிடைக்கும் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: