முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காகிதத்துக்கு விடை தருகிறது கேரள சட்டசபை : மின்னணுமயமாக மாற்றப்பட உள்ளது

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்  - கேரள சட்டசபை காகித பயன்பாடு இல்லாமல் முழுவதும் மின்னணுமயமாக மாற்றப்பட உள்ளது.  இதுதொடர்பாக அந்த மாநில சட்டப்பேரவை சபாநாயகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:  பேரவையில் 140 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அனை வரும் கேள்விகளைக் காகிதத்தில் அளிக்காமல் ஆன்லைனில் அனுப்புமாறு அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் சிலர் மட்டுமே ஆன்லைன் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். எனவே அனைவரும் ஆன்லைனுக்கு மாறும் வகையில் சிறப்பு பயிற்சி முகாமை நடத்த உள்ளோம்.

பேரவையில் ஒவ்வொரு உறுப்பினருக்கு முன்பாகவும் கணினி பொருத்தப்படும். அந்த கணினி மூலம் அவரவர் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வளர்ச்சித் திட்டங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்தத் திட்டம் மூலம் கேரள சட்டப்பேரவை விரைவில் காகிதம் இல்லாமல் மின்னணுமயமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்