முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் நிலநடுக்கம்: சேதம் ஏதும் இல்லை

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

டோக்கியோ - ஜப்பானின் கிழக்குப் பகுதியில் 6. 4 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.  ஜப்பானில் நேற்று காலை 9.14 மணியளவில் கிழக்கு கட்சூரா நகரை மையமாகக் கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் கிழக்குப் பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் ஜப்பானின் தென் பகுதியில் ஏற்பட்ட இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களுக்கு 50 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்