முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்முவில் சர்வதேச எல்லை பகுதியில் பி.எஸ்.எப் வீரர்கள் உஷார் நிலை

வெள்ளிக்கிழமை, 23 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

ஜம்மு  -  யுரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 18 வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்ட நிலை நிலவுகிறது. இந்த நிலையில் ஜம்மு பிராந்தியத்தில் 198கிலோ மீட்டர் வரை சர்வசேத எல்லை பகுதியில் பி.எஸ்.எப் வீரர்கள் உஷார் படுத்தப்பட்டனர்.  காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் யுரி ராணுவ முகாம் மீது  இந்த மாதம் 18ம் தேதியன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டார்கள். 19 வீரர்கள் காயம் அடைந்தார்கள். தாக்குதல் நடத்திய 6 பாகிஸ்தான் தீவிரவாதிகளும் இந்திய ராணுவத்தாக்குதலில் செத்து விழுந்தார்கள்.

 யுரி ராணுவ முகாம் மீதான தாக்குதலை தொடர்ந்து இந்தியா -பாகிஸ்தான் இடையே பதட்டம் நிலவுகிறது.  இந்த நிலையில் 198கிலோ மீட்டர் பகுதியில் சர்வதேச எல்லையில் பி.எஸ்.எப் வீரர்கள் உஷார் படுத்தப்பட்டார்கள். அவர்கள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற போதும் அதனை இந்திய வீரர்கள்  தடுத்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்