முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சூரியாவின் மகள், மகனின் கேள்விக்கு கிரிக்கெட் வீரர் டோனி பதில்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ‘‘எம்.எஸ்.டோனி அண்டோல்ட் ஸ்டோரி’’ திரைப்படத்தை விளம்பரப்படுத்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி சென்னைக்கு  வந்திருந்தார்.அவர் பேசுகையில்,  தமிழ்நாடு எனக்கு பிடித்தமாநிலம் அதனால் தான் சென்னை அணிக்கு தலைமை ஏற்றுக்கொண்டேன்.

இந்தியாவில் பல இடங்களில் உணவுகளை சாப்பிட்டது உண்டு ஆனால் சென்னை பிரியாணி போல சுவையான பிரியாணி எந்த மாநிலத்திலும் சாப்பிட்டது கிடையாது தமிழக பெண்கள் உடை அணியும் விதம் அவர்களிடம் எனக்கு மரியாதையை உருவாக்கியுள்ளது’ என்றார்.

சூரியாவின் மகள் தோனியிடம் , நீங்கள் வீடு,பள்ளி,மைதானம்  இதில் எங்கே சந்தோஷமாக இருப்பீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு‘‘விளையாட்டு மைதானம் எனக்கு இரண்டாவது பள்ளி,  பள்ளி எனக்கு இரண்டாவது வீடு, வீடு எனக்கு இரண்டாவது மைதானம்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

தொடர்ந்து பேசியவர், ‘‘நான் உங்கள் அப்பா சூர்யாவுடைய ரசிகன். சூர்யா நடித்த ” சிங்கம் ” படத்தை நான் ஹிந்தியில் பார்த்து வியந்துபோனேன்.என்ன ஒரு கம்பீரம்’’ என்று மனம் திறந்து பாராட்டினார்.

பள்ளிப் பருவத்தில் தாங்கள் குறும்புத்தனம் செய்வீர்களா என்று கேட்ட கேள்விக்கு, தோனி, ‘‘நான் பள்ளி பருவத்தில் மிகவும் விளையாட்டுத்தனமாகத்தான் இருப்பேன், இந்த வயதில் இப்படிதான் இருக்க வேண்டும்’’ என்று சொன்னவுடன், சூர்யாவின் மகனான தேவ் நானும் மிக குறும்புதனமான விளையாட்டு பையன் என்று பதிலளித்தான்’…

‘பின்பு தோனி உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று ரசிகர்கள் கேட்டவுடன், உடனே தோனி தோரனையுடன் எழுந்து நின்று சட்டையை கோதிய படி ‘‘நான் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் அவர் வழியை பின்பற்றுபவன்’’ என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலில் ‘‘என் வழி தனி வழி’’ என்று அவர் கூறவும் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.. கலை நிகழ்சிகளுடன் விழா நிறைவு பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனியின்  வாழ்க்கை வரலாறு, ‘எம்.எஸ்.டோனி–தி அன்டோல்டு ஸ்டோரி’ என்ற பெயரில்  திரைப்படமாக வருகிறது. இந்தி படமான இது, தமிழ், தெலுங்கிலும் டப்  செய்யப்பட்டு 30–ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

டோனியின் கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்  நடித்திருக்கிறார். மற்றும் கியாரா அத்வான், அனுபம் கெர், பூர்மிகா சாவ்லா  உட்பட பலர் நடித்துள்ளனர். நீரஜ் பாண்டே இயக்கி உள்ள இந்த படத்தை  பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் டோனி பங்கேற்று வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக சென்னைக்கு நேற்று வருகை தந்த டோனி, நடிகர்  ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவரிடம் கலகலப்பாக  பேசிய ரஜினிகாந்த், டோனியின் வாழ்க்கை வரலாறு படம் குறித்து ஆர்வமுடன்  கேட்டறிந்தார். சந்திப்பின் போது, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும்  உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago