முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன மழையின் பிடியில் பரிதவிக்கும் தெலுங்கானா

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

ஹைதராபாத், கன மழையின் பிடியில்  தெலுங்கானா மாநிலம்  பரிதவிக்கிறது. அந்த மாநிலத்தின் தலைநகர் ஹைதராபாத் உள்பட எல்லா நகரங்களும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. மழை வெள்ள நிலைமை குறித்து தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஹைதராபாத்தில் மீட்பு பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கடந்த 4 நாட்களாக கன மழை கொட்டி தீர்க்கிறது. அந்த மழையின் காரணமாக இரு மாநிலங்களிலும் இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் மேடக், நிசாம் பாத், நல்கோண்டா ஆகிய மாவட்டங்களில்  5 பேர் தண்ணீரில் மூழ்கியிறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு மழை வெள்ளம் அதிகளவில் வந்து கொண்டிருந்தது.

வாரங்கல் நகரி ல்  இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மேடக், மாவட்டத்தில் வாகன போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள  ஸ்ரீபாத யெல்லம் பள்ளி திட்டப்பகுதியில்  30ஆயிரத்து 993 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

நல்கொண்டா மாவட்ட அணைப்பகுதியிலும் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது.மழை வெள்ள நிலைமை குறித்து தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஹைதராபாத்தில் மீட்பு பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்