முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடன் போர் நடத்துவதுதான் இந்தியாவின் கடைசி முடிவாகும்: திக்விஜய சிங்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

பனாஜி, பாகிஸ்தானுடன் போர் நடத்துவதுதான் இந்தியாவின் கடைசி முடிவாக இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்தார்.

 காஷ்மீரில் தற்போது காணப்படும் பதட்டம் மற்றும் வன்முறைகளுக்கு அருகாமையில் உள்ள பாகிஸ்தானின் தூண்டுதல் நடவடிக்கைகளே காரணமாகும். எல்லை வழியாக தீவிரவாதிளை அனுப்பி  காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானின் நடவடிக்கை குறித்து இந்திய கடுமையாக எச்சரித்துள்ளது.
காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம்  எல்லை கோடு அருகே உள்ள மாவட்டம் ஆகும் . அங்குள்ள யுரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த  18ம் தேதியன்று தாக்குதல் நடத்தினார்கள் . இந்த தாக்குதலில் 18 வீரர்கள் கொல்லப்பட்டதுடன் 19 வீரர்கள் காயம் அடைந்தார்கள்.

 பாகிஸ்தானின் இந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் கோவா தலைநகர் பனாஜியில் நேற்று கூறியதாவது,

இந்தியா , பாகிஸ்தான் இரு நாடுகளுமே அணு ஆயுதம் பெற்றவைகளாக உள்ளன. எனவே இந்தியாவின் கடைசி முடிவு போராகவே இருக்கும். தீவிரவாத விஷயத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக உள்ளது. தீவிரவாதம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று விவாதிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத நடவடிக்கைகளுக்கு துணை போகும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து உரிய ஆதாரங்களை நாம் திரட்டி கொண்டே வர வேண்டும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்