முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினியை சந்திக்க விரும்புகிறேன் பி.வி.சிந்து பேட்டி

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ரஜினியை சந்திக்க விரும்புகிறேன் என ரியோ ஒலிம்பிக்கில்  பாட்மிண்டன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற  இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கூறினார்.

பிரேசில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

ஒலிம்பிக் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன் அது சற்று கடினமாக இருந்தது. இருந்தாலும் நான் எனது வழக்கமான வாழ்கைக்கு திரும்பி இருக்கிறேன். அடுத்த மாதம் நடைபெறும் பேட்மிண்டன் போட்டிகளுக்கு தயாராகி கொண்டு இருக்கிறேன்.
 
என் மீது படுகின்ற வெளிச்சத்தை நான் உள்வாங்கிக் கொள்வது இல்லை. கவன ஈர்ப்பை கண்டுகொள்வது இல்லை. ஒலிம்பிக் ஆடுகளத்தில் சிறந்த ஷாட்களை அடிக்கவே நான் முயற்சி செய்தேன். நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கைதான் எல்லாம். எனது பயிற்சியாளர் என்னுள் புகுத்தியதும் அதுதான். அனைவரது கவனமும் என் மீது திரும்பியுள்ளதால் இனி வரும் போட்டிகளில் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டியுள்ளது.

தன்னம்பிக்கை என்பது மிக முக்கியமானது. எனது பயிற்சியாளர் எனக்கு முன் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டே இருப்பார். அது என்னை நானே உற்சாகப்படுத்தி கொள்ள உதவும்.  உணவுக்கு எப்போதுமே எனது அன்றாட வாழ்கையில் முக்கியத்துவம் கொடுப்பேன் ஆனால் ஒலிம்பிக் விளையாட்டுக்கு துரித உணவைமுற்றிலுமாக தவிர்த்து விட்டேன். எனக்கு ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட புரதங்களும், எடை அதிகரிக்காத உணவுகளுமே தேவை.  நான் செல்போனை பயன்படுத்தவில்லை. காரணம், எனது கவனம் சிதறக் கூடாது.

ரஜினிகாந்தின் அந்த ட்வீட் அந்த நாளை முழுமையாக்கியது. நான் அவருக்கு நன்றி சொல்லக் கடமைபட்டிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளேன்.  எனக்கு டிவி பார்ப்பது மிகவும் பிடிக்கும். அது தவிர பயணங்கள் செய்வது, பாடல்கள் கேட்பது பிடிக்கும். அவரவர் தேர்தெடுக்கும் விளையாட்டு துறையில் நம்பிக்கையுடன் விளையாண்டால் வெற்றி நிச்சயம் என சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்