முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து மாணவி கொலை வழக்கில் 2 பேர் விடுவிப்பு

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

கோவா  - இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கார்லெட் கீலிங் என்ற 15 வயது மாணவி குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். கோவாவை சுற்றிப் பார்க்க வந்த போது, பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். அவ ருடைய உடல் கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி கடற்கரையில் கண்டெடுக்கப் பட்டது. 

இந்த வழக்கில் சாம்சன் டிசோசா, பிளாசிடோ கார்வல்லோ இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவி ஸ்கார்லெட்டுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த பின்னர் கொலை செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு பின்னர் கோவா போலீஸாரிடம் இருந்து சிபிஐ.க்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட இருவரையும் சிறப்பு நீதி மன்றம் விடுவித்துள்ளது. இதுகுறித்து ஸ்கார்லெட்டின் தாய் பியோனா மேக்கியோன் கூறும்போது, ‘‘என் மகள் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். தீர்ப்பு வரும் இந்த நாளுக்காக காத்திருந்தேன். ஆனால், தீர்ப்பை கேட்டு நொறுங்கிவிட்டேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்