முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவம் பதிலடி: பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய ராணுவம் வெறும் வாய்ச் சொல்லுடன் நிற்காது உரிய பதிலடி தந்தே தீரும் என்று பிரதமர் மோடி தனது மான் கி பாத் வானொலி உரையில் பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

பிரதமர் மோடி  மாதம் தோறும் மான் கி பாத் என்ற வானொலி உரையை நாட்டு மக்களுக்காக அளித்து வருகிறார். மனதில் இருந்து பேசுகிறேன் என்ற தலைப்பிலான இந்த உரை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒலிபரப்பாகிறது. இதில் நாட்டு பிரச்சினைகள் , அரசு செயல் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி மக்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
நேற்று அவர் மான் கி பாத்  உரையில் கூறியதாவது,

அமைதியும் ஒற்றுமையும் நமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுபவை. அவையே முன்னேற்றத்திற்கான பாதையகவும் உள்ளன. எனவே காஷ்மீர் மக்கள் அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

காஷ்மீர் யுரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள்நடத்திய  தாக்குதல் இந்தியாவில் அனைத்து தரப்பினரையும் கோபமடைச்செய்தது. இது 1965ம் ஆண்டு போரின் போது மக்களிடையே ஏற்பட்ட கோபத்தை பிரதிபலிப்பதாக இருந்தது.  யுரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். கடந்த இரு மாதமாக காஷ்மீரில் பதட்ட நிலை நிலவுகிறது. அமைதி மற்றும்  ஒற்றுமை உணர்வுதான் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும். அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க வேண்டும்.

இந்த மாதம் 18ம் தேதியன்று யுரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகியுள்ளனர். அவர்களுக்கு  அஞ்சலி செலுத்துகிறோம். இந்த இழப்பு அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல . இந்த தேசத்திற்கே ஏற்பட்ட இழப்பு ஆகும். மீண்டும் நான் கூறுகிறேன். இந்த தாக்குதல் நடத்திய குற்றாவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் உள்ள 125 கோடி மக்கள் அமைதியாக வாழ நமது ராணுவத்தினரரின்  வீரமே காரணம் . நமது ராணுவத்தினை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். இந்த தருணத்தில் காஷ்மீர் மக்களுடன் பேச விரும்புகிறேன்.  பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் இந்த மாதம் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடந்தது. இதில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களையும் வீராங்கனையையும் பாராட்டுகிறேன்.

கடந்த இரு ஆண்டுகளுக்கு நாட்டில் தூய்மை திட்டம்  மேற் கொள்ளப்பட்டது. ஸ்வாச் பாரத் என்ற பெயரிலான இந்த திட்டம் குறித்து மக்களிடம்  நல்ல விழிப்புணர்வு உள்ளது. அவர்கள் அந்த திட்டத்தில் சிறப்பாகவும் செயல்படுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். அவரது  மான் கி பாத் உரை 35 நிமிடம் இருந்தது. யுரி ராணுவல தாக்குதலை எங்களால் மறக்க முடியாது. 18 வீரர்களின் உயிரிழப்பு வீண் போகாது .  குற்றவாளிகளுக்கு பதிலடி தந்தே தீருவோம் என்றும் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி தனது உரையில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்