முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கான்பூர் டெஸ்ட் : வெற்றியை நோக்கி இந்திய அணி

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

கான்பூர் :  கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி ஆடும் 500வது டெஸ்ட் போட்டி ஆகும். இந்த டெஸ்ட்டில் இந்தியாவை எதிர்த்து ஆடும் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில்  4விக்கெட் டுகளை இழந்து 93ரன் மட்டுமே எடுத்து தடுமாறியது. இதனால் இந்திய அணி மகத்தான வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

நியூசிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் 500வது டெஸ்ட் பந்தயமாக உள்ளது. இந்த பந்தயத்தில் மகத்தான சாதனையை நோக்கி இந்திய அணி செல்கிறது.

முதல் இன்னிங்சில்இந்தியா 318ரன்னும்    நியூசிலாந்து அணி 262ரன்னும்   எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது.  நேற்று முன்தினம் ஒரு விக் கெட் இழப்புக்கு 159ரன் எடுத்திருந்த இந்திய அணி நேற்று தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இந்திய வீரர்  ரோசித்தும்(68ரன்) ஜடேஜாவும்(50ரன்) ஜோடி சேர்ந்து விரைவாக 100ரன்சேர்த்தார்கள்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியைக்காட்டிலும்  56ரன் கூடுதலாக எடுத்திருந்தது. இதனால் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில்  434 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற நிலையில் ஆட தொடங்கியது.

நேற்று நடந்த 4வதுநாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி  4விக்கெட் இழப்புக்கு 93 ரன் மட்டுமே எடுத்து தோல்வியை தவிர்க்க போராடியது. நியூசிலாந்து விக் கெட்டுகளை இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் அபாரமாக வீழ்த்தினார். அவர்  நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்டில்(0) டாம் லாதம் (2ரன்) ஆகியோரது விக்கெட்டுகளை   5பந்துகள் இடைவெளியில் கைப்பற்றினார். இதன் மூலம் அவர் 200வது டெஸ்ட் விக்கெட்டை எடுத்தார்.  அவர் தனது 37வது டெஸ்ட்டில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.   டெஸ்ட் போட்டிகளில் மிக வேகமாக இந்த 200 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. 200 டெஸ்ட் விக்கெட்டுகளை இதுவரை 9 இந்திய பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

உலக டெஸ்ட் போட்டிகளில் மிக வேகமாக 200 விக் கெட்டுகளை கைப்பற்றி சாதனை பந்து வீச்சாளர் என்கிற பெருமை ஆஸ்திரேலிய வீரர்  கிளாரி கிரிம் மெட்டுக்கு உள்ளது. அவர் 36 டெஸ்ட்டுகளில் இந்த 200 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவரையடுத்து உலக அளவில் 2வது இடத்தில் அஸ்வின் உள்ளார். அவர் 37 டெஸ்ட்டுகளில் இந்த 200 விக் கெட்டுகளை சரித்துள்ளார். கான்பூர் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 4 விக் கெட்டுக்கு 93 ரன் என்கிற நிலையில் 4வது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. 5வது இறுதி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது. நியூசிலாந்து அணி வெற்றி பெற இன்னும்  341ரன்களை எடுக்க வேண்டும் .ஆனால் அந்த அணி வசம் இன்னும்  6விக்கெட்டுகளே உள்ளன. களத்தில் நியூசிலாந்து வீரர் லுக் ரோன்ச்சி( 38ரன்) மிடசேல்  சான்ட்னர் (8ரன்) இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்