முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள் : அஸ்வின் சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

கான்பூர் :  டெஸ்ட் போட்டிகளில் 200 விக் கெட்டுகளை வேகமாக  கைப்பற்றிய முதல் இந்திய பந்து வீச்சாளராக அஸ்வின் சாதனை  படைத்தார். அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும்  கான்பூர்  டெஸ்ட் போட்டியின் போது இந்த சாதனையை நிகழ்த்தினார்.

கான்பூரில் தற்போது இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது..,இந்த டெஸ்ட் போட்டி இந்திய அணியின் 500வது டெஸ்ட் பந்தயமாகும்.

இந்த டெஸ்ட் பந்தயத்தில் இந்திய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இந்த அணி வலுவான நிலையை எட்ட இந்திய சுழல் பந்து வீச்சாளர் கள் கை கொடுத்தனர். இந்திய அணியில் உள்ள தமிழக சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின்  தனது 37வது டெஸ்ட்டில் 2 00விக் கெட்டுகளை எடுத்து சாதனை பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். அவர் கான்பூர் டெஸ்ட்டில்  நேற்று நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்சனை வீழ்த்திய போது இந்த சாதனையை எட்டினார். கான்பூர் டெஸ்ட்டில் 4வது நாள் ஆட்ட முடிவு வரை அஸ்வின்  7 விக் கெட்டுகளை எடுத்துள்ளார்.

உலக டெஸ்ட் போட்டிகளில்  மிக குறைந்த டெஸ்ட்டுகளில் 200 விக் கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்த வீரராக ஆஸ்திரேலியாவின் சுழல் பந்து வீச்சாளர் கிளாரி கிரிம் மெட் உள்ளார். அவர் 36 டெஸ்ட்டுகளில் இந்த விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரையடுத்து அஸ்வின் 37 டெஸ்ட்டுகளில் 200 விக் கெட்டுகளை எடுத்து உள்ளார்.

உலக அரங்கில் டெஸ்ட் போட்டிகளில் 200 விக் கெட்டுகளை மிக குறைந்த டெஸ்ட்டுகளில் எடுத்த  சாதனை வீரர்கள் பட்டியலில்  அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார். அஸ்வினை யடுத்து  ஆஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லி(38 டெஸ்ட்) பாகிஸ்தான் வீரர் வாகுர் யூனூஸ் (38 டெஸ்ட்)  தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்  டேல்  ஸ்டெய்ன்( 39டெஸ்ட்) ஆகியோர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்