முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் உருவ தபால் தலை வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

சேலம் : ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு தபால் துறை சிறப்பித்துள்ளது.

பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் இந்த மாதம்  பாராலிம்பிக் போட்டி நடந்தது.மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

சென்னையில் இருந்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டிக்கு சென்ற மாரியப்பனுக்கு உறவினர்கள், நண்பர்கள், ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் படித்த பெரியவடகம்பட்டி பள்ளியில் அவர் பெயரில் தபால் தலை வெளியிடப்பட்டது.

மை ஸ்டாம்ப் என்ற திட்டத்தின்கீழ் சேலம் தபால் துறை சார்பில் தபால் தலை வெளியிடப்பட்டு சிறப்பிக்கப்பட்டது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்