முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா சில தினங்களில் டிஸ்சார்ஜ் - டாக்டர்கள் குழு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை :  சிறப்பான சிசிச்சையால் வேகமாக குணமடைந்து வரும் முதல்வர் ஜெயலலிதா ஒரு சில தினங்களில்  டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார்  என அப்போலோ மருத்துவமனை  டாக்டர்கள் குழு தெரிவித்தது.

முதல்வர் ஜெயலலிதா  உடல் நலக்குறைவு காரணமாக இந்த மாதம் 22ம் தேதியன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில்  சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சிறப்பான சிகிச்சையால் முதல்வர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் தற்போது வழக்கமான உணவுகளை உண்டு வருகிறார்.  சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் உடனிருந்து சிகிச்சை தொடர்பான செயல்பாடுகளை கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில்  முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் குழு செய்தியாளர்களிடம் நேற்று மாலை தெரிவித்ததாவது,

முதல்வர் ஜெயலலிதா, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள  அப்போலா மருத்துவமனையில் 22-9-2016அன்று அனுமதிக்கப்பட்டார்.  அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு இருந்தது.  அவருக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது. மறுநாளே அதாவது, 23-9-16 அன்றே காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முதல்வர் வழக்கமான உணவை எடுத்து வருகிறார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

தேவைப்படும் நேரத்தில் உரிய மருந்துகள் தரப்படுகின்றன. மருத்துவ நெறிமுறைப்படி உரிய ஆய்வுகள் , சோதனைகள் மீண்டும் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க  மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வர் தொடர்ந்து வழக்கமான உணவை எடுத்து வருகிறார். இதற்கிடையே, முதல்வரின் உடல் நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில்  வெளியாகியுள்ளன. சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. , இந்த தகவல் முற்றிலும் தவறானது.ஆதாரமற்றது. முதல்வர் வெளி நாட்டுக்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

தற்போது அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையால் முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார்.  அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அவர் ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவர் விரைவில்  தனது வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்வார். இவ்வாறு அப்போலா மருத்துவர்கள் குழு தெரிவித்தது.

இந்த பேட்டியின் போது, அரசு ககாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய பாஸ்கர், டாக்டர்  சிவக்குமார், டாக்டர் பாமா, மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சுப்பையா விஸ்வநாதன், டாக்டர் வெங்கட், டாக்டர்  ரமேஷ், ஆகியோர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago