முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதத்தை கைவிடாதவரை இந்தூஸ் தண்ணீர் ஆணைய பேச்சு வார்த்தையை ரத்து செய்ய இந்தியா முடிவு - பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  ரத்தமும் தண்ணீரும் ஒரே நேரத்தில் ஓட முடியாது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் கைவிடாதவரை இந்தூஸ் நீர் ஆணைய பேச்சு வார்த்தையை நடத்த முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்தூஸ் தண்ணீர் ஒப்பந்தம் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் குறித்த ஆய்வு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடை பெற்றது. இரு நாடுகள் இடையே கடுமையான பதட்டம் நிலவி வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர்  எஸ்.ஜெய் சங்கர், மற்றும் நீர் ஆதார செயலாளர், பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இதில்,இந்தூஸ் நீர் ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக இந்தியாவின் மேற்கு நதிகளளை நல்ல முறையில் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில்  1987ம் ஆண்டு துல்புல் வழிகாட்டி திட்டத்தை கைவிடப்படவும் முடிவு செய்யப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கட்டப்படும் அணைகள் குறித்து  பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள யுரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த மாதம் 18ம் தேதியன்று தாக்குதல் நடத்தினார்கள். இதில் 18 வீரர்கள் பலியானதுடன் 19 வீரர்கள் காயம் அடைந்தார்கள். இந்த தீவிரவாதத்தாக்குதலுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 18 வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. இதற்கு பாகிஸ்தான் உரிய பதிலடி பெறும் என பிரதமர் மோடி வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்