முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. யாத்திரையில் 'ஷூ' வீசப்பட்ட சம்பவம்: ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

சிதாபூர் : உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலை யாத்திரை நிகழ்ச்சியின் மீது காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மீது ஒரு நபர் ஷூ வை எறிந்தார். இந்த சம்பவத்திற்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ மீது அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபூர் மாவட்டத்தில் நேற்று  சாலை யாத்திரை நடந்தது. இந்ந நிகழ்ச்சியின்போது ராகுல் காந்தி மீது ஒரு நபர் ஷூவை எறிந்தார். அந்த செருப்பு அவர் மீது படாமல் நூலிழையில் தப்பினார். அந்த செருப்பு இன்னொரு காங்கிரஸ்காரர் மீது தாக்கியது. அந்த செருப்பை எறிந்தவர் யார் என்பது தெரியவில்லை. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர்  ஜிதின் பிரசாதா மற்றும் சிறப்பு  பாதுகாப்பு பிரிவினர் ராகுல் காந்தி அருகில் இருந்தார்கள்.

தன்மீது செருப்பு எறியப்பட்ட சம்பவத்தில் அரசியல் சதி உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதீய ஜனதா மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டிய அவர் இது குறித்து அவர் கூறுகையில், “நான் அவர்களுக்கு பயப்பட மாட்டேன். பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஷூ வீச்சு நடவடிக்கையில் ஈடுபடுகிறது. நான் திரும்பி செல்லப்போவது கிடையாது. பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். நபர்கள்  என் மீது செருப்பை எறியலாம். ஆனால் நான் பின்வாங்க மாட்டேன். உங்கள் கோபம், உங்களின் பலவீனம் ஆகும். நீங்கள் உங்களது கோபத்தில் உறுதியாக இருங்கள். நான் அன்பின் மீதும் சகோதரத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று அமேதி எம்.பி.யான அவர் எதிர் கட்சியினருக்கு அறைகூவல் விடுத்தார்.

ராகுல் காந்தி மீது செருப்பு வீசிய இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றார்கள். அந்த நபர் ஹாரியம் சர்மா என்பதும் அவர் பத்திரிகையாளர் என்றும் தெரிவித்தார். அவர் எந்த அரசியல் கட்சியினருடன் தொடர்புடையவர் என்பது தெரியவில்லை. அந்த இளைஞர் போலீஸ் வேனில் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்  காங்கிரசால் கடந்த 60 ஆண்டுகளில், இந்த தேசம் மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது என கூறினார்.

காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு தவறான வாக்குறுதிகளை தந்தது மட்டுமில்லாமல் வேறு எந்த சாதனையையும் செய்யவில்லை. அவர்கள் மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாக கூறினார்கள். மேலும் விவசாய கடன் தள்ளுபடி செய்வதாகவும் ஆட்சியில் இருந்த போது கூறினார்கள். ஆனால் ஒன்றும் செய்யவில்லை என்றும் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி தற்போதே பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. ராகுல் காந்தி உ.பி. மாநிலத்தில் 2500 கிலோ மீட்டர் யாத்திரையை மேற் கொண்டுள்ளார். அவர் பல்வேறு கூட்டங்களிலும்.  பொது  மக்களையும் சந்தித்து வருகிறார். தற்போதைய பயணத்தில் ராகுல் காந்தி தாங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்றும் அவர் தெரிவித்து வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்